வெளிநாடுகளில் கொடூர சித்திரவதைகள்! இலங்கை திரும்பிய 28 பெண்கள்!

வெளிநாடுகளுக்கு சென்று பல்வேறு சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் இலங்கை திரும்பியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

பணிப்பெண்களாக குவைத்திற்கு சென்று, பல்வேறு சித்திரவதைகளுக்கு முகங்கொடுத்த பெண்களே இன்று இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.

குவைத்திலிருந்து, யூ.எல்.230 என்ற விமானம் மூலம் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.

சித்திரவதைகளுக்கு ஆளானவர்கள் மற்றும் சம்பளம் வழங்கப்படாது பணிபுரிந்தோர் இதில் உள்ளடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் குறிப்பிட்டுள்ளது.