வெளிநாட்டில் வாழும் இலங்கை அகதிகள் தொடர்பில் ஆய்வு நடத்த நடவடிக்கை!

இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கையர்களுள், இலங்கைக்கு மீண்டும் திரும்புவதற்கு சுயவிருப்பம் கொண்டுள்ளவர்கள் தொடர்பான ஆய்வொன்று மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது என, இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒஸ்டின் பெர்ணான்டோ இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வசித்து வரும் அகதிகள், படிப்படியாக இலங்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்த நிலையிலேயே, இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கைக்கு வரும் அவர்கள், மீண்டும் ஒரு நெருக்கடியான சூழ்நிலைக்குள் விழுவதற்கு விரும்பமில்லை என்றும் மீள்குடியேற்றம், வாழ்வாதாரம் உள்ளிட்ட விடயங்களில் அவர்கள் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.