ஸ்மார்ட்போன்களை அதிகம் பயன்படுத்துவோருக்கு பகீர் எச்சரிக்கை!!!

ஸ்மார்ட்போன்கள் மற்றும் இணையதளத்தை அளவுக்கு அதிகமாக பயன்படுத்தினால் பதற்றம், சோர்வு ஆகியவற்றுடன் மூளையின் செயல்பாட்டிலும் பாதிப்பு ஏற்படும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு சிலர் இரவில் உறங்கும் நேரத்திலும் ஸ்மார்ட்போன்களை அருகிலேயே வைத்துக் கொள்கின்றனர்.

இந்நிலையில், நேரம் காலம் தெரியாமல் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்திய இளைஞர்களை ஆய்வாளர்கள் சோதனை செய்தனர்.

அப்போது, அவர்களுக்கு அளவுக்கு அதிகமான பதற்றமும், சோர்வும் ஏற்படுவதை கண்டறிந்துள்ளனர்.

சிக்னல் குறைவாக இருக்கும்போது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தினால், அதில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, மூளையில் பாதிப்பை ஏற்படுத்துமாம்.

அத்துடன் மூளையின் செயல்பாட்டில் சமநிலையற்ற தன்மை ஏற்படும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.