ஹோட்டலில் உணவு சப்ளை செய்யும் ரோபோக்கள்! ரோபோக்களுக்காக வரும் மக்கள்

தொழில்நுட்பம் இன்றைய காலகட்டத்தில் அபரீத வளர்ச்சி கண்டுள்ளது என்று தான் கூறவேண்டும். அந்த வகையில் தற்போது பல வேலைகளை ரோபோக்களே பணி செய்யும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ச்சி கண்டுள்ளது.

ஹங்கேரி நாட்டின் தலைநகரம் புடாபெஸ்டில் ஒரு தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி. கம்பெனி) ஒரு ஹோட்டல் தொடங்கி உள்ளது. அதில் 16 முதல் 20 ‘ரோபோ’க்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளன.

அவை அங்கு சாப்பிட வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்யும் உணவு வகைகளை பரிமாறுவதோடு வேண்டிய பானங்கள் மற்றும் தண்ணீரையும் சப்ளை செய்கிறது.

அதுமட்டுமல்லாது ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு வழிகாட்டுகிறது. அவர்களுடன் உரையாடுகிறது. குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் நடனம் ஆடி மகிழ்விக்கிறது.

இதனால் ஹோட்டலுக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

‘ரோபோக்’களின் சேவை தொடருமானால் மக்களுக்கான வேலை வாய்ப்பில் பாதிப்பு ஏற்படும் என்ற எதிர்ப்பும் எழுந்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அதற்கு பதில் அளித்த ஹோட்டல் நிர்வாகம் பணி புரியும் ‘ரோபோ’க்களை இயக்க தொழில் நுட்ப நிபுணர்கள் பலர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.