ஹோட்டலில் வேலை செய்யும் ரோபோ

நட்சத்திர ஹோட்டல் அறைகளில் பணிபுரியும் ரோபோ வாடிக்கையாளர்களுக்கு தேவையான அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

அமெரிக்காவில் சிலிக்கன் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள “அலோப்ட் குபர்டினோ” நட்சத்திர விடுதியில் 3 அடி உயர தானியங்கி ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ரோபோ விடுதியில் தங்கும் வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய தண்ணீர் போத்தல்கள், மைக்ரோவேவ் பொப்கான், குழந்தைகளுக்கான புத்தகங்கள் ஆகியவற்றை கொடுக்கிறது.

‘தி ஷெராடன்’ லோஸ்ஏஞ்சல்ஸ்கான் கேபிரியல் என்ற நட்சத்திர விடுதி விரைவில் திறக்கப்பட உள்ளது.

இங்கு 8 ரோபோக்கள் பணியமர்த்தப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.