01-04-2019 இன்றைய ராசிபலன்கள்

01-04-2019 திங்கட்கிழமை விளம்பி வருடம் பங்குனி மாதம் 18-ம் நாள். துவாதசி திதி. ஏகாதசி காலை 07.58 முதல். பிறகு அவிட்டம் நட்சத்திரம் இரவு 11.18 முதல். யோகம்: சித்த யோகம்.

நல்ல நேரம் 6.00-7.30, 3.00-4.00.
எமகண்டம் மதியம் மணி 10.30-12.00.
இராகு காலம் மாலை மணி 7.30-9.00.
குளிகை: 1:30 – 3:00.
சூலம்: கிழக்கு.

பொது: ஒழுகைமங்கலம் ஸ்ரீ மாரியம்மன் யாளி வாகனத்தில் பவனி.

பரிகாரம்: தயிர்.

மேஷம்

உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந் தவர்கள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும்.

அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவு வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் மரியா தைக் கூடும். புகழ், கௌரவம் கூடும் நாள்.

ரிஷபம்

மாறுபட்ட யோசனைகள் உங்கள் மனதில் உதிக் கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி தங்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும்.

வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.

மிதுனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு, சலிப்பு யாவும் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். புதியவர்களின் நட்பால் உற்சாக மடைவீர்கள்.

சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.

கடகம்

காலை 9.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது.

வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். திட்டமிட்டவை தாமதமாகி முடியும் நாள்.

சிம்மம்

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். ஆடை, ஆபரணம் சேரும்.

வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சு மங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்களின் நட்பு கிடைக்கும்.

வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். தொட்ட காரியம் துலங்கும் நாள்.

துலாம்

வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். உங்களைச் சுற்றியிருப் பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதுமை படைக்கும் நாள்.

விருச்சிகம்

பால்ய நண்பர்கள் உதவுவார்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்தித்து மகிழ்வீர்கள். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.

தனுசு

சவால்கள், விவாதங் களில் வெற்றி பெறுவீர்கள். காணாமல்போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும்.

உத்யோகத்தில் அதிகாரி களுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். விருந்தினர் வருகை யால் வீடு களைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும்.

வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

கும்பம்

காலை 9.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள்.

வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி எந்த பொறுப்புகளையும் ஒப்படைக்க வேண்டாம். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

மீனம்

எளிதில் முடியவேண்டிய சில காரியங்களை இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். உடல் அசதி, சோர்வு வந்து விலகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்துப் போகும். போராடி வெல்லும் நாள்.