06-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

06-11-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி? விளம்பி வருடம், ஐப்பசி மாதம் 20ம் திகதி, ஸபர் 27ம் திகதி, 06-11-2018 செவ்வாய்க்கிழமை தேய்பிறை, சதுர்த்தசி திதி இரவு 10:51 வரை; அதன்பின் அமாவாசை திதி, சித்திரை நட்சத்திரம் இரவு 8:46 வரை; அதன்பின் சுவாதி நட்சத்திரம், சித்தயோகம்.

* நல்ல நேரம் : காலை 7:30-9:00 மணி
* ராகு காலம் : மதியம் 3:00-4:30 மணி
* எமகண்டம் : காலை 9:00-10:30 மணி
* குளிகை : மதியம் 12:00-1:30 மணி
* சூலம் : வடக்கு

பரிகாரம் : பால்
சந்திராஷ்டமம் : உத்திரட்டாதி, ரேவதி
பொது : தீபாவளி,
நீராட நல்ல நேரம்: அதிகாலை 5:00 – 5:30 மணி துர்க்கை வழிபாடு, கரிநாள்.

மேஷம்:
வாழ்வில் பெற்ற நன்மைகளை எண்ணி மனம் மகிழ்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை வியத்தகு அளவில் முன்னேற்றம் பெறும்.ஆதாயம் உயரும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு எதிர்ப்பு விலகும்.

ரிஷபம்:
மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். நண்பரின் நற்செயலை மனமுவந்து பாராட்டுவீர்கள். தொழில், வியாபாரத்தில் நிலுவைப்பணி நிறைவேறும். உபரி பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். பெண்கள் விருந்து, விழாவில் கலந்து கொள்வர்.

மிதுனம்:
திட்டமிட்ட பணியில் மாற்றம் செய்ய நேரிடலாம். தொழில், வியாபாரத்தில் உள்ள அனுகூலம் பாதுகாப்பது நல்லது. சராசரி பணவரவு கிடைக்கும். வீடு மற்றும் வாகன பாதுகாப்பில் தகுந்த கவனம் தேவை. பிராணிகளிடம் விலகுவது நல்லது.

கடகம்:
பேச்சு, செயலில் நிதானம் பின்பற்றவும். தொழிலில் இலக்கு நிறைவேற கூடுதல் அவகாசம் தேவை. லாபம் சுமார். பெண்கள் செலவில் சிக்கனம் பின்பற்றுவது நல்லது. பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். நண்பரால் உதவி கிடைக்கும்.

சிம்மம்:
பேச்சில் அன்பும், செயலில் பண்பும் கலந்திருக்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட வளர்ச்சி ஏற்படும். ஆதாயம் பன்மடங்கு உயரும். பெண்கள் புத்தாடை, நகை வாங்குவர்.

கன்னி:
உறவினரில் சிலர் எதிர்பார்ப்புடன் அணுகுவர். இயன்ற அளவில் உதவுவீர்கள். தொழிலில் மாறுபட்ட சூழ்நிலை உருவாகி தொந்தரவு தரலாம். திடீர் செலவால் சேமிப்பு கரையும். மாணவர்கள் பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்ல வேண்டாம்.

துலாம்:
பேச்சில் மங்கலத் தன்மை நிறைந்திருக்கும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான மாற்றம் செய்வீர்கள்.பணவரவும், நன்மையும் அதிகரிக்கும். குடும்பத் தேவையை பூர்த்தி செய்வீர்கள். எதிர்பார்த்த சுப செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:
மனக்குறையை அடுத்தவர்களிடம் சொல்ல வேண்டாம். தொழிலில் பணிச்சுமை அதிகரிக்கும். மிதமான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தின் சட்டதிட்டத்தை மதிக்கவும். பெண்கள் பிள்ளைகளின் நலன் குறித்து ஆலோசிப்பர்.

தனுசு:
புதியவர்களின் அறிமுகமும், நட்பும் கிடைக்கும். மனம், செயலில் புத்துணர்வு பிறக்கும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும்.

மகரம்:
பிறருக்கு உதவுகிற எண்ணம் மேலோங்கும். தொழிலில் இருந்த குளறுபடி சரியாகும். தாராள பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் சலுகை பெறுவர். உடல் ஆரோக்கியம் பலம் பெறும். பெண்கள் குடும்பத்தினருடன் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.

கும்பம்:
மனதில் குழப்பமான சூழ்நிலை ஏற்படலாம். நண்பரின் ஆலோசனை புதிய நம்பிக்கை தரும். தொழிலில் உற்பத்தி விற்பனை அதிகரிக்க மாற்று உபாயம் தேடுவீர்கள். பெண்களுக்கு கூடுதல் செலவு ஏற்படும். ஒவ்வாத உணவுகளைத் தவிர்க்கவும்.

மீனம்:
செயலில் தடுமாற்றம் உருவாகலாம். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் அளவான மூலதனம் போதும். உறவினர் வகையில் அதிக செலவு செய்ய நேரிடலாம். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.