10-01-2019 இன்றைய ராசிபலன்கள்

10-01-2019 வியாழக்கிழமை விளம்பி வருடம் மார்கழி மாதம் 26-ம் நாள். வளர்பிறை. சதுர்த்தி திதி பிற்பகல் 2.58 மணி வரை பிறகு பஞ்சமி. சதய நட்சத்திரம் மறுநாள் பின்னிரவு 3.40 மணி வரை பிறகு பூரட்டாதி. யோகம்: மரணயோகம் மறுநாள் பின்னிரவு 3.40 மணி வரை பிறகு சித்தயோகம்.

நல்ல நேரம் 9-12, 4-7, 8-9.
எமகண்டம் காலை மணி 6.00-7.30.
இராகு காலம் மதியம் மணி 1.30-3.00.
குளிகை: 9:00 – 10:30.
சூலம்: தெற்கு.
பொது: மதுரை மீனாட்சி சொக்கநாதர் தெப்போற்சவம். பெருஞ்சேரி வாகீஸ்வரர் புறப்பாடு.
பரிகாரம்: நல்லெண்ணெய்.

மேஷம்

எதிர்பார்ப்புகள் நிறை வேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பழைய கடனை பைசல் செய்ய உதவிகள் கிடைக்கும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு.

வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள்.

ரிஷபம்

உங்கள் செயலில்வேகம் கூடும். பிள்ளைகள் தங்கள் தவறை உணருவார்கள். புண்ணிய ஸ்தலங்கள்சென்று வருவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள்.

வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின்நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும்.புதியவர்கள் நண்பர் களாவார்கள். நீண்ட நாள்பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும்.

உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தடைப்பட்ட வேலைகள் முடியும் நாள்.

கடகம்

சந்திராஷ்டமம் தொடர்வதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்யாதீர்கள்.

வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில்அதிகாரிகள் குறை கூறுவார்கள். பொறுப் புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.

சிம்மம்

சவாலான வேலைகளையும் சர்வ சாதாரணமாக முடிப்பீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும்.

வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.

கன்னி

எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் திருப் பம் ஏற்படும். அரசால் அனு கூலம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு.

உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.

துலாம்

குடும்பத்தில் உங்கள்கை ஓங்கும். நட்பால் ஆதாயம் உண்டு. பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறை வேற்றுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள்.

கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். கனவு நனவாகும் நாள்.

விருச்சிகம்

எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருக்கு மருத் துவச் செலவுகள் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள்.

வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தி யாகும் நாள்.

தனுசு

தன்னிச்சையாக சிலமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக்கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள்.

வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமை யைக் கண்டு மேலதிகாரி வியப்பார். நினைத்ததை முடிக்கும் நாள்.

மகரம்

குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். எதிலும் ஒரு தெளிவுபிறக்கும். வராது என்றிருந்தபணம் வரும். நம்பிக்கைக்குரியவர்கள் உதவுவார்கள்.

நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் முடியும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.

கும்பம்

ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்துநீங்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்கவேண்டி வரும்.

வியாபாரத்தில் எதிர்பார்த்தபணம் தாமதமாக வரும்.உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். போராட்டமான நாள்.

மீனம்

எளிதில் முடித்துவிட லாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியில் போய் முடியும். வாகனத்தில் செல்லும் போதும், சாலையை கடக்கும் போதும்நிதானம் அவசியம்.

வியாபாரத்தில் புதுமுதலீடு செய்யலாம். உத்யோகத்தில்மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.