11கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு!

அவுஸ்திரேலியாவில் 11கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் பாறைப்படிம எலும்புக்கூட்டை ஆற்றின் கழிமுகப்பகுதியில் இருந்து கண்டுபிடித்துள்ளனர்.

ஏழரை அடி நீளங்கொண்ட இந்த டைனோசர் வான்கோழியைப் போல் இருகால்களைக் கொண்ட இலைதழைகளைத் தின்னும் விலங்காகும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

மிகப் பெரிய வெள்ளத்தின்போது இந்த விலங்கு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுக் கடற்கரையோரக் கழிமுகத்தில் ஒதுங்கியிருக்கலாம் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அவுஸ்திரேலியா அண்டார்க்டிகாவுடன் இணைந்திருந்த காலத்தில் இந்த டைனோசர் வாழ்ந்திருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்டோரியா மாநிலத்தின் தெற்குக் கடற்கரையில் மெல்போர்னில் இருந்து 170 கிலோமீட்டர் தொலைவில் இந்த டைனோசரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.