11 வயது சிறுமியை சிதைத்த 70 வயதுக் கிழவன்! தந்தையின் மதுப்பழக்கத்தால் வந்த வினை!!

11 வயதான சிறுமியை 70 வயது தாத்தா ஒருவர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பையில் குர்கான் பகுதியில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்;

குறித்த சிறுமி தனது தந்தை மற்றும் பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். தாயின் தனது சொந்த பணியின் காரணமாக வேறு இடத்தில் இருந்துள்ளார்.

இவர்களது வீட்டிற்கு அருகில் வசித்த 70 வயது முதியவருடன் சிறுமியின் தந்தை இரவு நேரத்தில் ஒன்றாக சேர்ந்து மது அருந்துவதை வழக்கமாக கொண்டதைத் தொடர்ந்து இருவரும் நண்பர்களாகியுள்ளனர்.

இதனையடுத்து இரவில் மது அருந்திவிட்டு தந்தை அசந்து தூங்கிவிடுவார். இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட தாத்தா வீட்டிற்குள் நுழைந்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இவ்வாறு பலமுறை செய்துள்ளார். இதனால் சிறுமி தனது தாய்க்கு போன் செய்து, தான் மிகவும் பயந்துபோய் உள்ளதாகவும் உடனே வரும்படி தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து விரைந்து வந்த தாய், நடந்தவை குறித்து அறிந்து அதிர்ச்சியடைந்து பொலிஸில் முறைப்பாடு அளித்துள்ளார்.

Section 376 கீழ் முதியவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

மது அருந்துவதால் இவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிப்பதுடன், பிள்ளைகளின் வாழ்க்கை சீரழிவதற்கு காரணமாகவும் உள்ளது.

ஆகவே இச்சம்பவம் பலரது வாழ்க்கையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்கின்றனர் பலர்.