111 ஓட்டங்களுக்குள் சுருண்ட மேற்கிந்திய தீவுகள்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 111 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

டாக்காவில் 2 வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. நேற்றைய நாள் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கெட்டுக்கு 75 ஓட்டங்களை எடுத்து விக்கெட்களை இழந்தது.

இந்தநிலையில் 2 ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்நிலையில் இன்று (02) ஆரம்பமான 3 ஆம் நாள் போட்டியில் மெஹிடி ஹசனின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 111 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

மேலும் பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் மெஹிடி ஹசன் 7 விக்கெட்களையும், ஷகிப் அல்ஹசன் 3 விக்கெட்களையும் வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்தும் 397 ஓட்டங்கள் பின்னிலையில் தனது 2 வது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.