12 ஆம் திகதி வெளியாக இருக்கும் ஸ்பெஷல்: முழு விபரம் உள்ளே

ஆப்பிள் நிறுவனத்தின் 2018 கேட்ஜெட்கள் எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி அறிமுகமாக இருக்கிறது.

2018 ஐபோன் மாடல்களின் அறிமுக நிகழ்வு எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி ஸ்டீவ் ஜாப்ஸ் அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்த நிகழ்வில் 2018 கேட்ஜெட்களை ஆப்பிள் அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் XS

ஆப்பிள் இந்த ஆண்டு அறிமுகம் செய்ய இருக்கும் சிறிய ஐபோன் மாடலாக ஐபோன் XS இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் OLED ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஐபோன் X மாடலின் மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் புதிய பிராசஸர், பெரிய பேட்டரி மற்றும் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐபோன் XS மேக்ஸ்

ஐபோன் XS மேக்ஸ் மாடல் இந்த ஆண்டு வெளியாக பெரிய ஐபோன் மாடலாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இது சாம்சங்கின் கேலக்ஸி நோட் 9 மாடலுக்கு போட்டியாக இருக்கும் என்றும் இதில் 6.5 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றபடி ஆப்பிள் பென்சில் சப்போர்ட் மற்றும் மூன்று பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 4

செப்டம்பர் 12 நிகழ்வில் ஆப்பிள் புதிய வாட்ச் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்வாட்ச் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதன்படி வட்ட வடிவம் கொண்ட பெரிய டையல், ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே, அதிக ரெசல்யூஷன் மற்றும் பல்வேறு அம்சங்கள் கொண்டிருக்கின்றன.