152 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் முழு நீல நிலவு!

நீல நிலவு எனப்படும் முழு நிலவு சந்திரகிரகணம் எதிர்வரும் 31ம் திகதி நிகழ உள்ளது.

இந்த 2018 ஆம் ஆண்டில் தோன்றும் இந்த முதல் சந்திரகிரகணம் முழு நிலவு சந்திரகிரகணமாக வர உள்ளது.

இதற்கு முன்பு 1866 மார்ச் 31ம் திகதி தோன்றிய இந்த முழு நிலவு சந்திரகிரகணம் தற்போது சுமார் 152 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நிகழ இருக்கிறது.

இதேவேளை இந்த முழு நிலவு சந்திரகிரகணம் 77 நிமிடங்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் மத்திய மற்றும் கிழக்கு ஆசியா, இந்தோனேஷியா, நியூசிலாந்து, அவுஸ்திரேலியாவின் பெரும்பாலான பகுதிகளில் நன்றாக பார்க்க இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அரிதான நீல நிலவு அடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2028 டிசம்பர் 31ம் திகதியும் அதனைத் தொடர்ந்து 2037 ஜனவரி 31ம் திகதியும் தோன்றும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.