18-05-2019 இன்றைய ராசிபலன்கள்

2019 மே 18 திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.

மேஷம்

மேஷம்: உங்களின் அறிவாற் றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். பிள்ளைகளின் பொறுப்புணர்வுகள் அதிகமாகும். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்

ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள்.


மிதுனம்

மிதுனம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புதுமை படைக்கும் நாள்.


கடகம்

கடகம்: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்

சிம்மம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


கன்னி

கன்னி: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அழகு, இளமைக் கூடும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிட்டும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.

துலாம்

துலாம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். மற்றவர்களுக்காக நியாயம் பேசப் போய் பிரச்னைகளில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


விருச்சிகம்

விருச்சிகம்: குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் மேலதிகாரியை கலந்தாலோசித்து முடிவுவெடுக்கப் பாருங்கள். போராடி வெல்லும் நாள்.

தனுசு

தனுசு: குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதிய எண்ணங்கள் செயல் வடிவம் பெறும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள்.

மகரம்

மகரம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர், நண்பர்கள் எதிர்பார்ப்புகளுடன் பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

கும்பம்

கும்பம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக்
கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.


மீனம்

மீனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சில நேரங்களில் நன்றி மறந்த சொந்த-பந்தங்களை நினைத்து வருத்தப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமத
மாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் அவ்வப்போது டென்ஷனாவீர்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்