180 அடி உயரத்தில் இருந்து குதித்து சாதனை செய்த இளைஞர்!

பனிச்சறுக்கு ஸ்கூட்டர் மூலம் 180 அடி உயரத்தில் இருந்து குதித்து இளைஞர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.

இந்த சம்பவம் கனடாவில் இடம்பெற்றுள்ளது.

ஸ்வீடனைச் சேர்ந்த கல்லி ஜான்சன் என்பவர் சிறுவயது முதலே பனிச்சறுக்கு விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் ஸ்னோ ஸ்கூட்டர் எனப்படும் வாகனம் மூலம் அதிக உயரத்தில் இருந்து குதித்து சாதனை செய்ய எண்ணியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அவர் கனடாவில் உள்ள விஸ்லர் மலைப்பகுதிக்கு வந்தார்.

சுமார் 7 ஆயிரத்து 992 அடி உயரத்தில் பனிபடர்ந்த பகுதிக்குச் சென்ற ஜான்சன், அங்குள்ள 180 அடி உயரமுள்ள பாறையின் மீதிருந்து பனிச்சறுக்கு ஸ்கூட்டர் மூலம் குதித்து சாதனை படைத்தார்.