2ஆம் தவணை பரீட்சை நடத்தப்படுமா? கல்வி அமைச்சர் விளக்கம்

இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண நிலைமைகளால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 2ஆம் தவணைக்குரிய கல்வி நடவடிக்கைகள் முழுமையாக பூர்த்தி செய்யவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் இரண்டாம் தவணை பரீட்சையை இரத்து செய்யுமாறு சில தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

எனினும் இரண்டாம் தவணை பரீட்சை எக்காரணம் கொண்டும் இரத்துசெய்யப்படமாட்டாது என்று கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிவித்துள்ளார்