2வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் நாளை (12) தொடங்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்டிற்கான 12 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டங்கள் வித்தயாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஹைதராபாத்தில் ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

இந்திய அணியில், பிரித்வி ஷா, லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ரிஷப் பந்த், குல்தீப் யாதவ், அஸ்வின், ஜடேஜா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், புஜாரா, மயாங்க் அகர்வால், முகமது சிராஜ், ஹனுமா விஹாரி, ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.