2 மணிநேரம் நின்று போன 5 வயது சிறுவனின் இதயம்! பின்பு நடந்த அதிசயம்!

5 வயது சிறுவன் ஒருவனுக்கு 2 மணி நேரம் நின்று போன இதயம் மீண்டும் துடிக்க ஆரம்பித்தத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

Yibin நகரைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தனது வீட்டருகில் உள்ள குட்டையில் தவறி விழுந்த நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் குறித்த சிறுவனைக் காப்பாற்றி, அவசர உதவி எண்ணுக்கு உடனடியாக தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மருத்துவர்கள் நின்று போன சிறுவன் இதயத்தை மீண்டும் இயக்க CPR சிகிச்சை செய்தனர். ஆனால் 40 நிமிடங்கள் சிகிச்சை கொடுத்தும் சிறுவனின் இதயம் இயங்கவில்லை.

ஆனால் அருகிலிருந்த சிறுவனின் தாய், மீண்டும் சிகிச்சை தரும்படி கெஞ்சி அழுதுள்ளார்.

இதையடுத்து கிட்டத்தட்ட 2 மணி நேரம் வரை சிகிச்சை கொடுக்கப்பட்ட நிலையில் சிறுவனின் இதயம் துடிக்க ஆரம்பித்தது.

இதையடுத்து மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட சிறுவனுக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மருத்துவர் வெயின் கூறுகையில்,

சிறுவன் உயிர் பிழைத்துள்ளது உண்மையில் அதிசயம் என்றும், தான் 14 வருடங்களாக மருத்துவராக பணியாற்றுகிறேன்.

ஆனால் இது போன்ற ஒரு விடயத்தை இதுவரை பார்த்ததில்லை என்றும் கூறியுள்ளார்.