2019 ஆம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம்: வெளியான அறிவிப்பு

2019 ஆம் வருடத்துக்கான ஐபிஎல் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெரும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்கள், 20 வெளிநாட்டு வீரர்கள் என மொத்தம் 70 வீரர்கள் ஒப்பந்தம் செய்யப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏலத்தில் பல வீரர்கள் அணி மாறிவிட்டனர். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இருந்து,

தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர் டிகாக் விடுவிக்கப்பட்டு, அவர் மும்பை இண்டியன்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அந்த அணியில் இருந்த அகிலா தனஞ்செயா, முஸ்தபிஷூர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, யுவராஜ் சிங் உட்பட 11 வீரர்களை விடுவித்துள்ளது.

அதனால் அந்த புதிய வீரர்களை அதிகமாக இந்த ஏலத்தில் எடுக்கலாம். டெல்லி அணி, கௌதம் காம்பீர் உட்பட சில வீரர்களை விடுவித்துவிட்டது.

சன் ரைசர் ஐதராபாத் அணியில் இருந்த ஷிகர் தவான், டெல்லி அணிக்கு மாறியுள்ளார். அந்த அணி விருத்திமான் சாஹா, பிராத்வொயிட் ஆகியோரை விடுவித்துள்ளது.

இதேவேளை மற்ற அணிகளும் சில வீரர்களை விடுவித்தும் புதிய வீரர்களை எடுக்கவும் ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.