4 நாட்களில் தொப்பை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஒரு டம்ளர் இதைக் குடிங்க

தொப்பை பிரச்சினை இன்று பலருக்கு பெரும் பிரச்சனையாகவே உள்ளது.

தொப்பையைக் குறைக்க இயற்கை முறையில் சிறந்த வழிகளை பயன்படுத்துவதே சிறந்ததாகும்.

அந்தவகையில் தொப்பையை 4 நாட்களில் கரைக்கும் ஓர் அற்புத பானத்தை பற்றி பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

துருவிய இஞ்சி –  1 டேபிள் ஸ்பூன்

வெள்ளரிக்காய் – 1 (தோல் நீக்கி துண்டுகளாக்கியது)

எலுமிச்சை 1 துண்டுகளாக்கப்பட்டது

புதினா இலைகள்-12

தண்ணீர் -8 டம்பளர்

செய்முறை

இரவில் படுக்கும் முன், ஒரு போத்தலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருட்களையும் சேர்த்து ஊற வைக்க வேண்டும்.

இந்த நீரை காலையில் எழுந்ததும் வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இந்த பானத்தை 4 நாட்கள் காலையில் எழுந்ததும் குடித்தால், நல்ல தீர்வு கிடைக்கும்.

முக்கியமாக இந்த பானத்தைப் பருகும் 4 நாட்களும், நல்ல ஆரோக்கியமான டயட் மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி வந்தால், நிச்சயம் தொப்பை குறைவதைக் காணலாம்.

இந்த பானத்தை வெறும் வயிற்றில் 4 நாட்கள் குடித்தால், மெட்டபாலிசம் மேம்பட்டு, கொழுப்பு செல்கள் கரைக்கப்பட்டு, உடலின் மூலை முடுக்குகளில் உள்ள நச்சுக்கள் முழுமையாக வெளியேற்றப்படும்.