40 முறை மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற கணவன்!!

மனைவியை 40 முறை கத்தியால் குத்திக் கொலை கணவன் கொலை செய்துள்ளார்.

ஹரியானாவின் Gurugram நகரத்தில் இருக்கும் Ashok Vihar பகுதியைச் சேர்ந்த தம்பதி Pankaj Bhardwaj(28)- Vanshika Sharma.

இந்த தம்பதிக்கு கடந்த 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்துள்ளது.

திருமணம் முடிந்த சில மாதங்களிலே Vanshika Sharma மற்றும் அவரது தாய் Pankaj Bhardwaj-ஐ தொடர்ந்து தொந்தரவு செய்து வந்துள்ளனர்.

தேவையில்லாத வீண் பழிகளை சுமத்தியமையினால் இவர்கள் மீது ஆத்திரத்தில் இருந்த பான்கஜ் சம்பவதினத்தன்று மனைவியை கத்தியால் 40 முறை குத்திக் கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விரைந்து வந்த பொலிசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

தலைமறைவாக இருந்த Pankaj Bhardwaj-ஐ கைது செய்தனர். இந்த கொலைக்கு உதவிய Nashim Ahmed(39) என்பவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.

மனைவி மற்றும் மாமியாரின் டார்ச்சர் தாங்க முடியாமையினால் இவ்வாறு கொலை செய்ததாக அவர் கூறியுள்ளார்.