42,000 வயதான குழந்தை மம்மத் அவுஸ்திரேலியக் கண்காட்சிக்கு வருகிறது!!

மம்மத் (mammoth) எனக் கூறப்படும் யானை போன்ற விலங்கு ஒன்று அவுஸ்திரேலியா அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.

நாளை (18) முதல் காட்சிக்கு வைக்கப்படவுள்ள மம்மத் என கூறப்படும் 42 ஆயிரம் வருடம் இளமையான, லியூபா (Lyuuba), சைபீரியா நாட்டின் பனி மலைகளில் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிகிறது.

2007 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படும் அதேவேளை, தற்போது உயிருடன் இருக்கும் விலங்குகளில், ஆசிய யானைகள் தான் இதன் நெருங்கிய உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.