46 ஆண்டுகளின் பின் அவுஸ்திரேலியப் பெண் படைத்த சாதனை!

46 ஆண்டுகளின் பின் அவுஸ்திரேலியப் பெண் ஒருவர் பிரெஞ்ச் ஓபன் பட்டத்தை முதல் முறையாக வென்றுள்ளார்

பாரீஸ் நகரில் நடைபெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அவுஸ்திரேலிய வீராங்கனை Ashleigh Barty முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த பட்டத்தை அவுஸ்திரேலியர் ஒருவர் சுமார் 46 ஆண்டுகளுக்கு பின்னர் அதாவது 1973-ம் ஆண்டுக்கு பிறகு வென்றுள்ளார்.

நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் 8-ம் நிலை வீராங்கனையான Ashleigh Barty 38-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் Marketa Vondrousova-வுடன் மோதி 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று முதல்முறையாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார்.

இந்த வெற்றியின் மூலம் Ashleigh Barty தரவரிசையில் 2-வது இடத்துக்கு முன்னேறுகிறார்.

அவருக்கு $3.74 மில்லியன் டொலர்கள் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. 23 வயதான Ashleigh Barty கடந்த 2014-ஆம் ஆண்டு டென்னிசில் இருந்து விலகி கிரிக்கெட் பக்கம் சென்று பின்னர் 2016-ம் ஆண்டில் மறுபடியும் டென்னிஸ் விளையாட ஆரம்பித்திருந்தார்.

அத்துடன், பூர்வீக மக்கள் பின்னணி கொண்ட Ashleigh Barty அவர்கள் சப்தமின்றி மற்றொரு சாதனையையும் ஏற்படுத்தியுள்ளார். பூர்வீக மக்கள் பின்னணி கொண்டவர்களில் French Open கோப்பையை வென்ற இரண்டாவது வீராங்கனை Ashleigh Barty ஆவார். பூர்வீக மக்கள் பின்னணி கொண்ட பெண்மணி Evonne Goolagong Cawley அவர்கள் 1971 ஆம் ஆண்டு French Open கோப்பையை வென்றார். தற்போது Ashleigh Barty அவர்கள் இந்த கோப்பையை வென்று இரண்டாவது பெண்மணி என்ற சாதனையை ஏற்படுத்தினார்.