5 வயதுப் பிஞ்சை கொடூரமாக சிதைத்த கொடூரன்! அதிரடியில் ஜனாதிபதி

5 வயது குழந்தை உறவினர் ஒருவரால் கொடூரமாக சிதைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஜனாதிபதி அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

துஷ்பிரயோகத்திற்கு உள்ளான குறித்த குழந்தையின் முதுகெலும்பு நொறுங்கியுள்ளதாகவும், வாழ்நாளில் அந்த குழந்தை எழுந்து நடமாட முடியாத துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் சியரா லியோன் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ஜனாதிபதி ஜூலியஸ் அவசரநிலையை பிரகடனப் படுத்தியுள்ளார்.

கடந்த ஓராண்டுக்கு முன் குறித்த குழந்தையின் 28 வயது உறவினரே வான்கொடுமைக்கு உட்படுத்தியுள்ளார்.

குழந்தை துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமைக்கு பழி தீர்க்க வேண்டும் என பாட்டி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சியரா லியோன் நாட்டில் பலாத்கார குற்றச்சாட்டுகளுக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

ஆனால் பெரும்பாலான வன்கொடுமை வழக்குகள் தண்டனை வழங்கப்படாமலே முடிவுக்கு வருகிறது எனக் கூறப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் பெரியளவில் கலாச்சாரம் கருதி வெளிச்சத்துக்கு வருவதில்லை.

ஆகவே அந்த நிலை மாற வேண்டும் எனவும், அனைவரும் இந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும் என்றும் ஜனாதிபதி ஜூலியஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.