5000 தான் சம்பளம்: முன்னேற்றம் குறித்து மனம் திறந்த செந்தில்

ஐயாயிரம் சம்பளமாக பெற்று அதன் பிறகு முன்னேறி மக்கள் மனங்களில் இடம்பிடித்தது தான் பெரிய மகிழ்ச்சி என்று நகைச்சுவை நடிகர் செந்தில் கூறியுள்ளார்.

தனது அனுபவங்களை தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கலந்துகொண்டு பகிர்ந்து கொண்ட போது அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

இன்றைக்கு லட்சம் கோடி என்று எல்லாம் சம்பளம் பேசுகிறோம். ஆனால் அன்றைக்கு ஐயாயிரம் தான் சம்பளமாக கிடைத்தது.

இன்று சினிமாவை டிஜிட்டலில் எடுக்கிறோம். அப்போது பிலிம் ரோலில்தான் எடுக்க வெண்டும். ஏகப்பட்ட செலவாகும்.

படத்தின் தயாரிப்பாளர் படப்பிடிப்பின்போது எவ்வளவு பிலிம் ரோல் ஆகுது? யார் எல்லாம் டேக் அதிகமாக வாங்கி பிலிம் ரோலை வீணடிக்கிறார்கள்? என்று கவனித்துக் கொண்டே இருப்பார்கள்.

அப்படித்தான் வைதேகி காத்திருந்தாள் படத்தில் வரும் பெட்ரோமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட்டது.

எப்படிண்ணே இதுல எரியுது என்று கேட்டு ஒரே டேக்கில் உடைத்தேன். இயக்குனர், தயாரிப்பாளர் ஆகிய எல்லோருக்குமே மகிழ்ச்சி.

அந்த காட்சி இன்றைக்கும் பேசப்பட நான் மட்டுமே காரணம் அல்ல. கவுண்டமணி அண்ணனும் தான் என்று கூறினார்.