6 வருடத்திற்குப் பின் சினிமாவில் தலைகாட்டும் நடிகை!

சச்சின் சந்தோஷ் சுப்ரமணியம் படங்களில் தனது குறும்புத்தனமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்த நடிகை தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்தார்.

இந்தி நடிகரைத் திருமணம் செய்துகொண்டு நடிப்பில் இருந்து ஒதுங்கினார்.

6 ஆண்டுகள் நடிப்புக்கு விடுப்பு எடுத்தவர் தற்போது மீண்டும் நடிக்க வருகிறார். முதலில் கணவர் நடிக்கும் மவுலி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுகிறார்.

தொடர்ந்து ஜோதிகா, சமந்தா போல தனக்கு முக்கியத்துவம் தரும் வேடங்களில் நடிக்க இருக்கிறார்.

திருமணமான நடிகைகளுக்கும் தனி மார்க்கெட் உருவாகி வருவதால் நடிகை மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்ற பேச்சு அடிபடுகிறது.