60 கிலோ எடையை குறைத்து அசத்திய அவுஸ்திரேலிய சிறுமி!

அவுஸ்திரேலியாவில் 16 வயதுடைய சிறுமி ஒருவர் 60 கிலோ எடை குறைத்து ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார்.

127 கிலோ எடையால் அவதிப்பட்டு வந்த குறித்த பள்ளி மாணவி 12 மாதத்தில் இவ்வாறு 60 கிலோ எடையை குறைத்துள்ளார்.

Josie Desgrand என்ற பள்ளி மாணவியே இதனை செய்துள்ளார்.

அவர், தனது அதிக உடல் எடை காரணமாக ஆடைகள் அணிவதற்கும், அவரது வேலைகளை செய்து கொள்வதற்கும் சிரமப்பட்டுள்ளார்.

இதனால் அவர் பள்ளியில் கேலிக்கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார். இவ்வாறான நிலையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அவர் பொதுவெளியில் செல்வதற்கே அவமானப்பட்டுள்ளார்.

இதனால், தனது உடல் எடையை குறைக்க முடிவு செய்துள்ளார். அதற்கமைய முதல் ஆறு மாதத்திற்கு இனிப்பு உணவுகள் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை.

குறைந்த கார்போஹைட்ரேட் கொண்ட உணவுகளையே சாப்பிட்டுள்ளார்.

பழங்கள், நார்ச்சத்துள்ள உணவுகளையும் தாண்டி, தனக்கென ஒரு உடற்பயிற்சி ஆசிரியரை நியமித்துள்ளார்.

தினமும் 2 மணிநேரம் உடற்பயிற்சி மேற்கொண்டுள்ளார். இதன் மூலம் 12 மாதத்தில் 60 கிலோ எடையை அவர் குறைத்துள்ளார்.