60 கோடி பேஸ்புக் பயனர்களின் பாஸ்வேர்டுகள் கசிந்ததா..? அம்பலமான தகவல்!

பேஸ்புக்கில் 60 கோடி பயனர்களின் கடவுச் சொற்கள் அந்நிறுவனத்தின் 20 ஆயிரம் ஊழியர்களால் மிகச் சுலபமாக அணுகும் வகையில் இருந்தது எனக் கூறப்படுகிறது.

பேஸ்புக் நிறுவனத்தின் தகவல் பாதுகாப்பு குறைப்பாட்டை, பாதுகாப்பு வல்லுநர் பிரையன் கிரெப்ஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கை பயன்படுத்தும் 60 கோடி பயனர்களின் லாகின் பாஸ்வேர்ட்கள் 2012 ஆம் ஆண்டிலிருந்து வெறும் சாதாரண எழுத்து வடிவில் சேகரிக்கப்பட்டு வெளியாகியிருக்கலாம் என பிரையன் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஃபேஸ்புக் நிறுவனம், தங்கள் நிறுவனத்திற்குள்ளான நெட்வொர்க்கில் பாஸ்வோர்ட்கள் குறித்த கோளாறை சரி செய்துவிட்டதாக கூறியுள்ளது.