62 ஆண்டுகள் மனைவியிடம் செவிடர் போல நடித்த கணவன்! இறுதியில் நடந்த விபரீதம்

84 வயதான நபர், 80 வயதாகும் தனது மனைவியுடன் 62 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்துவிட்டு, தற்போது விவகாரத்தை எதிர்நோக்கியுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

அமெரிக்காவின் கனடிக்கெட் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மனைவி சொல்வதே வேதவாக்கு என நம்மில் பலர் உள்ள நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பாரி டவ்சன், அதற்கு நேரெதிராக இருக்க முடிவு செய்து, மனைவியின் சொல்லை காதிலேயே வாங்கிக் கொள்ளக்கூடாது என்று நினைத்து திருமணம் செய்து கொண்டார்.

தனது கோட்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து, திருமணத்திற்கு முன்பே மனைவி டோரத்தியிடம் தனக்கு காது கேட்காது என சொன்னார்.

அவரும் அதற்கு சம்மதம் தெரிவித்தார். இருவரது திருமணம் நடந்தது.

62 ஆண்டுகள் மனைவியிடம் ஒரு வார்த்தை கூட அவர் பேசாமல் வாழ்ந்துள்ளார். தற்போது இந்த தம்பதிக்கு 6 வாரிசுகள், 13 பேரன் மற்றும் பேத்திகள் உள்ளனர்.

கணவரின் இயலாமைக்கு தீர்வு தேடும் விதமாக சமீபத்தில் டோரத்தி, சைகை மொழியை பயன்படுத்த தொடங்கினார்.

அதற்காக இரண்டு வருடம் செலவழித்து தன் கணவருக்கு புரியும் வகையில் சைகைகளால் பேசத் தொடங்கினார்.

இதுகுறித்து டோரத்தி கூறியபோது அவருடன் பேசுவதற்கு நான் என் கைகளால் சைகைகளை பயன்படுத்த தொடங்கினேன் அது அடுத்த பிரச்சனை ஏற்படுத்தியது.

சைகைகளை பார்த்து உணரும் ஆற்றல் இல்லாமல் பார்வைக் குறைபாடு என்று கணவர் கூற தொடங்கினார். ஆனால் இப்போது எல்லாமே ஏமாற்று வேலை என புரிந்து கொண்டேன் என்று தெரிவித்தார்.

மொத்த குடும்பத்தினரும் பாரி டவ்சனுக்கு காது கேட்காது, வயதான காரணத்தினால் பார்வை குறைபாடு என்று இத்தனை ஆண்டுகாலம் நம்பிக்கொண்டிருந்துள்ளனர்.

வீட்டில் இருக்கும் போதெல்லாம் தனக்கு காது கேளாதவர் போலவே இருக்க தொடங்குவார். ஆனால் ஒருமுறை யுடியூப் வீடியோவில் அவர் மிக அழகாக கரோக்கி இசையை கேட்டுக் கொண்டே அதற்கு ஏற்றவாறு பாடியதைக் கேட்க நேர்ந்தது.

இரவு விடுதியில் ஒரு அறக்கட்டளை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது அவர் பாடியது யூடியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. அதைப் பார்த்த பொழுது தான் இவர் இதுவரை நடித்து வந்தது குடும்பத்துக்கு தெரியவந்துள்ளது.

இதனால் மனமுடைந்த டோரத்தி, கணவரிடமிருந்து விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். ஆனால் ட்வசன் தரப்பு வழக்கறிஞர் கூறும்போது, மனைவிக்காக மட்டுமே காது கேளாதவர் போல நடித்தார்.

இதனால் அவர் யாரையும் ஏமாற்றவில்லை. இயல்பிலேயே அமைதியான குணம் கொண்டவர் ட்வசன். ஆனால் அவரது மனைவி டோரத்திக்கு பேச்சை நிறுத்த காசு கொடுக்க வேண்டும். தன்னையும்இ தனது திருமண வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள டவ்சன் தனக்கு காது கேட்காது என்று கூறி நடித்து வந்தார்.

தனது குழந்தைகளுக்கும் குடும்பத்திற்குமாக அவர் இந்த தியாகத்தைச் செய்துள்ளார். இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள் இவர்களது வெற்றிகரமான வாழ்க்கை ஏன் 62 வருடங்கள் தொடர்ந்து வந்திருக்கிறது என்று என வழக்கறிஞர் ராபார்ட் மேலும் தெரிவித்துள்ளார்.