73 வயது பிரித்தானியர் மீது காதல் கொண்ட ஆசிய அழகி! சிறப்பாக நடந்த திருமணம்

73 வயது நபர் 30 வயது மதிக்கத்தக்க அழகிய பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பிரித்தானியாவில் துணை மேயராக உள்ளவரே இவ்வாறு இளம் பெண்ணை திருமணம் செய்துள்ளார்.

Cambridgeshire கவுண்டியின் மார்ச் நகரின் துணை மேயரான 73 கிட் ஓவனுக்கு ஏற்கனவே திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர்.

ஓவனின் மனைவி கடந்த 2008ல் உயிரிழந்துவிட்டார். இந்நிலையில் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஐசா என்ற அழகிய பெண்ணுடன் இணையதளம் மூலம் ஓவனுக்கு நட்பு ஏற்பட்டது.

பின்னர் தொலைபேசி இலக்கங்களை ஒருவருக்கொருவர் பரிமாறி கொண்டு வாட்ஸ் அப் மூலம் நெருக்கமாகி இருவரும் காதலிக்க தொடங்கினர்.

தன்னை விட அதிக வயது மூத்தவர் ஓவன் என்றும் பாராமல் ஐசா அவரை தீவிரமாக காதலித்தார்.

இதையடுத்து ஆசிய நாடான பிலிப்பைன்ஸிக்கே சென்று காதலியை ஓவன் சந்தித்தார். இந்நிலையில் இருவரும் நேற்று பிரித்தானியாவில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்துக்கு பின்னர் கணவன் – மனைவி இருவரும் முத்தம் கொடுத்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்த திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.