9 இலட்சம் பெறுமதியான கைத் தொலைபேசியோடு சிக்கிய இருவர்!-

திருடப்பட்ட 15 கைத்தொலைபேசிகளுடன் இருவர் கைதான சம்பவம் யாழ்.பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ளது.

கடந்த மாதம் பருத்தித்துறையில் தொலைபேசி கடை ஒன்றை உடைத்து பல பெறுமதியான கைத்தொலைபேசிகள் கொள்ளையிடப்பட்டதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து பருத்தித்துறை பொலிசார் மற்றும் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசாரால் இச்சம்பவம் தொடர்பான விசாரணையினை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று (16) களவாடப்பட்ட கைத்தொலைபேசி ஒன்றுடன் பருத்தித்துறையை சேர்ந்த ஒருவர் யாழ்ப்பாணத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் இன்னும் ஒருவர் பருத்துறையில் கைது செய்ய்பட்டார்.

இருவரிடமிருந்தும் களவாடப்பட்ட 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான 15 கைத்தொலைபேசிகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

அத்துடன் இருவருமே பருத்தித்துறையை வதிவிடமாக கொண்ட 21, மற்றும் 23 வயதை உடையவர்கள் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பருத்தித்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.