கவிதைகள்

கவிதைகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கவிதைகள்

பொய்யென்று ஆனது

கையை விட்டுப் போய் பொய்யென்று ஆனது காதல்..! மனம் புண்ணாகிப் போனதடா உன்னாலே..!! நீ இல்லை என்றாலும் வாழுகிறாய் என்னோடு என் நினைவுகளில்..! ப்ரியமானவள் இந்தியா

பிரிந்த பின்

பிரிவின் பின் சொல்லப்படாத காதல் குத்துகிறது ஈட்டியாய்...!! பிரிந்த பின்னும் தொடரும் என் காதல் இலக்கணமின்றித் தவிக்கிறது! -செண்பகம்- சென்னை இந்தியா

மெய்யாக மெய் மறக்கிறேன்

மெய்யாக மெய் மறக்கிறேன் உன் வார்த்தையில் பெண்ணே..!! விருந்தாகிறது உன் விழிகள்..! என் கவிதையின் முதல் அர்த்தமும் நீதான் என் காதலின் முழு அர்த்தமும் நீதான் அன்பே! ரக்ஷ்சிதா கனடா

இரவின் கதகதப்பில்

என்னவனே..! ஆதவன் மறையும் மாலைப் பொழுதில் நீலவானின் நிலவொளியில் சங்கமிக்கட்டும் நட்சத்திரங்கள்..! இரவின் கதகதப்பில் உன்னுடன் நான் என்னுடன் நீ..!! -ரக்சன்- சுவிட்சர்லாந்து

நீயும் நானும்..!

நீயும் நானும் நாமல்லத் தான் இனி..!! இருந்தும் நம் காதல் பொய்யில்லையே! ஓரவிழிப் பார்வையிலே ஓங்கி அடித்தவளும் நீ என் இதயத்தில் இன்பத்தைத் தந்த தேனமுதும் நீ தானே!! -நிவேதா- ஜேர்மனி

தொலைதூரத் தேடல்!

தொலைதூரப் பயணம் தொலைதூரத் தேடல் எப்போது உன்னைப் பார்ப்பேன் என்ற கேள்விக்கு கிடைத்துவிட்டது பதில்...., உன்னைப் பார்க்கவே முடியாது என்று.....,,,, காயத்திரி லண்டன்

நிராகரிப்பு..!

தனிமையின் சாரல் என்னை நனைக்கிறது..! அவன் அனுமதி தரவில்லை காதலிக்க..! அதனால் அனுமதி பெறாமலே நிராகரித்துவிட்டான் -நிருபா- திருச்சி இந்தியா

காத்திருக்கையில்..!!

என் சுவாசங்களும் சுமையாகிப் போனது உன் நினைவுகள் இன்றி சுவாசித்ததால்..!! யுகங்கள் கூட சுகமாகிப்போகும் என்னவன் வருகைக்காக காத்திருக்கையில்..!! -ரட்ணா- மட்டக்களப்பு

கண்மணி..!!

உயிராக இருப்பேன் என்றும் உன்னோடு கண்மணி..!! கண்ணுறங்கும் நேரத்தில் கவிதையாய் வருகிறது அவளின் கடைக்கண் பார்வை..!! -சாந்தரூபன்- வவுனியா

எழுதுகிறேன் கவிதையை..!!

இலக்கண விதியைக் கொண்டு எழுதவில்லை என் கவிதையை என் தலைவிதியைக் கொண்டே எழுதுகிறேன் கவிதையை..!! -ரட்ணா- இந்தியா

தற்போதைய செய்திகள்

பதவி விலக தயாராக இருக்கும் ரிஷாட்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பதவி விலக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே அவருக்கு எதிராக நம்பிக்கையற்ற பிரேரணை அவசியமில்லையென அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார். பொது விழாவொன்றில் இன்று கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே தயா கமகே...

முகத்தை மறைத்தல் தொடர்பாக பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

முகத்தை மறைத்தல் தொடர்பாக இலங்கை பாடசாலைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, முகத்தை மூடுவது தொடர்பாக அவசர கால சட்ட விதிகளின் கீழ் விதிக்கப்பட்டுள்ள ஒழுங்கு விதிகள் குறித்து புரியாததன் காரணமாக முகத்தை மூடிய வகையில்...

இலங்கை மக்களுக்கு வானிலை மையம் விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!

வடக்கு , வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மணித்தியாலங்களில் இவ்வாறு மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு...

வலுவான இந்தியாவை உருவாக்க அழைப்பு விடுத்த நரேந்திர மோடி!

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், ஒன்றிணைந்து வலுவான இந்தியாவை உருவாக்குவோம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தல் குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள மோடி, இந்தியா மீண்டும்...

சற்று முன்னர் ஞானசார தேரர் விடுதலை!

சிறைத்தண்டனை அனுபவித்த கலகொட அத்தே ஞானசார தேரர் சற்றுமுன்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தேரரரை விடுதலை செய்வதற்கான ஜனாதிபதியின் உத்தரவு இன்று தமக்கு கிடைத்ததாக சிறைச்சாலைகள் ஆணையாளர்...

அதிகம் பார்க்கப்பட்டவை

ஆண்கள் 2 திருமணம் செய்யாவிட்டால் சிறை தண்டனை! அமுலுக்கு வரும் சட்டம்

ஒவ்வொரு ஆணும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பெண்களை திருமணம் செய்துக்கொள்ளாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சுவாசிலாந்து நாடு அறிவித்துள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சுவாசிலாந்து நாட்டில் ஒவ்வொரு ஆணும், இரண்டு அல்லது...