கவிதைகள்

கவிதைகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கவிதைகள்

பொய்யென்று ஆனது

கையை விட்டுப் போய் பொய்யென்று ஆனது காதல்..! மனம் புண்ணாகிப் போனதடா உன்னாலே..!! நீ இல்லை என்றாலும் வாழுகிறாய் என்னோடு என் நினைவுகளில்..! ப்ரியமானவள் இந்தியா

பிரிந்த பின்

பிரிவின் பின் சொல்லப்படாத காதல் குத்துகிறது ஈட்டியாய்...!! பிரிந்த பின்னும் தொடரும் என் காதல் இலக்கணமின்றித் தவிக்கிறது! -செண்பகம்- சென்னை இந்தியா

மெய்யாக மெய் மறக்கிறேன்

மெய்யாக மெய் மறக்கிறேன் உன் வார்த்தையில் பெண்ணே..!! விருந்தாகிறது உன் விழிகள்..! என் கவிதையின் முதல் அர்த்தமும் நீதான் என் காதலின் முழு அர்த்தமும் நீதான் அன்பே! ரக்ஷ்சிதா கனடா

இரவின் கதகதப்பில்

என்னவனே..! ஆதவன் மறையும் மாலைப் பொழுதில் நீலவானின் நிலவொளியில் சங்கமிக்கட்டும் நட்சத்திரங்கள்..! இரவின் கதகதப்பில் உன்னுடன் நான் என்னுடன் நீ..!! -ரக்சன்- சுவிட்சர்லாந்து

நீயும் நானும்..!

நீயும் நானும் நாமல்லத் தான் இனி..!! இருந்தும் நம் காதல் பொய்யில்லையே! ஓரவிழிப் பார்வையிலே ஓங்கி அடித்தவளும் நீ என் இதயத்தில் இன்பத்தைத் தந்த தேனமுதும் நீ தானே!! -நிவேதா- ஜேர்மனி

தொலைதூரத் தேடல்!

தொலைதூரப் பயணம் தொலைதூரத் தேடல் எப்போது உன்னைப் பார்ப்பேன் என்ற கேள்விக்கு கிடைத்துவிட்டது பதில்...., உன்னைப் பார்க்கவே முடியாது என்று.....,,,, காயத்திரி லண்டன்

நிராகரிப்பு..!

தனிமையின் சாரல் என்னை நனைக்கிறது..! அவன் அனுமதி தரவில்லை காதலிக்க..! அதனால் அனுமதி பெறாமலே நிராகரித்துவிட்டான் -நிருபா- திருச்சி இந்தியா

காத்திருக்கையில்..!!

என் சுவாசங்களும் சுமையாகிப் போனது உன் நினைவுகள் இன்றி சுவாசித்ததால்..!! யுகங்கள் கூட சுகமாகிப்போகும் என்னவன் வருகைக்காக காத்திருக்கையில்..!! -ரட்ணா- மட்டக்களப்பு

கண்மணி..!!

உயிராக இருப்பேன் என்றும் உன்னோடு கண்மணி..!! கண்ணுறங்கும் நேரத்தில் கவிதையாய் வருகிறது அவளின் கடைக்கண் பார்வை..!! -சாந்தரூபன்- வவுனியா

எழுதுகிறேன் கவிதையை..!!

இலக்கண விதியைக் கொண்டு எழுதவில்லை என் கவிதையை என் தலைவிதியைக் கொண்டே எழுதுகிறேன் கவிதையை..!! -ரட்ணா- இந்தியா

தற்போதைய செய்திகள்

இலங்கையில் மீண்டும் ஊரடங்குச் சட்டம் அமுல்!

இலங்கையில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவான் குணவர்தன தெரிவித்தார். அதன்படி பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று இரவு 9 மணிமுதல் நாளை அதிகாலை 4 மணி வரை அமுல்...

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...