கவிதைகள்

கவிதைகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கவிதைகள்

உன் புகைப்படம்..!!

இனி தவணை முறையில் மரணம் எனக்கு... ஏனெனில் என் கைபேசியில் உன் புகைப்படம் பதிவிறக்கம்..! - கவிதா - களுவாஞ்சிக்குடி இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால் யாழருவி இணையதளத்தில் பரிசீலித்து பிரசுரிக்கப்படும். yaalaruvi.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு...

எட்டும் தூரத்தில் எட்டா நிலா..!

உன் நினைவுகளுடன் நடை பயில துணை வந்தது அந்த நிலவு..!! நிலாவே, நீ தேயும் போது தேய்ந்தும் வளரும் போதும் வளர்கிறது என் காதலும்..! எட்டாத தூரத்தில் நீ இருக்கிறாய் வான் நிலாவே..! எட்டும் தூரத்தில் எட்டா நிலாவாக இருக்கிறாள் என் காதல் நிலா..! -ரதி- இந்தியா

உண்மையைச் சொல்லணும்…!!

ஊரில பள்ளிக்கூடம் சைக்களிள்ள போகேக்க ஊரின் தெரு ஓரம் எங்கும் கட்டாக்காலி நாய்கள் அங்கும் இங்குமாத் திரிறது வழமைதான்... அதிலயும் வீட்டில் இருந்து வெளிக்கிடேக்கேயே அம்மா வாசல் வரைவந்து டாட்டா காட்டி அனுப்பும் போது சொல்லுவா வேற ஒண்டும் இல்லை கவனமா போயிற்று வா ராசா றோட்டில கட்டாக் காலி நாய்கள்...

நினைவுகளின் நொடி..!

பேசவே கூடாது என முடிவெடுத்த பின் நிசப்த இரவில் பேச வைக்கிறது உன் ஞாபகங்கள்..!! நினைவுகளின் சங்கமத்தில் கொஞ்சி விளையாடும் நினைவுகளின் நொடி கசல்! -செந்தாமரை- சுண்ணாகம் இலங்கை

யாசகன்..!!

என்னை குப்பை என்று தூக்கி எறிந்துவிட்டாய்.. குப்பைத் தொட்டியை ஒரு கணமேனும் திரும்பிப் பார்... அதிலும் உன் பெயரையே நான் ஜெபித்துக் கொண்டு யாசிக்கிறேன் யாசகனாய்... - சங்கர் - ஜேர்மனி இதே போல் உங்களது கவிதைகள், ஆக்கங்கள் வரவேற்கப்படுகிறது. உங்களுடைய ஆக்கங்களை எமது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினால்...

ஒருதலைக் காதல்!!

மனசுக்குள் வந்த காதல் மனம் விட்டுப் பேசாமல் மண்டையை உடைத்து மல்லுக்கட்டுகிறது என்னோடு..!! விழி மூடும் இரவை வலியோடு தேடுகிறேன் விழியில் நீ வருவதினால்..!! சொல்லத் தான் வருகிறேன் சொல்லிவிடத் துடிக்கிறேன் சொல்லாத காதலால் சோகத்தில் மூழ்கிறேன்..!! உடல் வாங்கிய கல்லறையாய் உயிருக்குள் உனை வைத்து உயிரோடு புதைந்து கொண்டேன்..!! -யாழ்ரதி- இந்தியா

தனிமையின் நினைவுகள்!!

கட்டி அணைக்கும் உன் நினைவுகள் என்னருகில் இருக்கும் வரை இரவுகள் தனிமையில் இல்லை என்பதை அறிந்து கொண்டேன்   -ஷரண்- ஜேர்மன்

அதிகமாக காதலிக்கிறேன்..!!

நீ என்னை விட்டு தூரமாய் போன போதும் என்னால் உன்னை முன்பை விட அதிகமாக காதலிக்க மட்டுமே முடிகிறது........                                ...

வாழ்க்கைப் புத்தகம்!!

என் வாழ்க்கை எனும் புத்தகத்தில் ஒவ்வொரு பக்கத்திலும் நிறைந்திருப்பவன் நீ..!! நகரும் நாட்களில் புரட்டப்படும் பக்கங்களுடன் புரட்டப்படுகிறாய் நீ..!! பக்கங்களில் நிறைந்த நீ பக்கத்தில் வர மறுத்துவிட்டாய்..!! புரிந்தது மெய் பிரிந்தது உறவு.! உள்ளத்தில் நிறைந்த காதல் உயிருள்ள வரை உயிருடன்..!! - யாழ்ரதி - இந்தியா

காத்திருப்பு!!

தொலைதூரத்தில் நீ இருந்தாலும் என் நினைவுகளில் உன் அருகே வாழ்கிறேன்..!! எண்ணங்கள் நிஜமாகுமென திடத்துடன் காத்திருக்கிறேன் உன் நினைவின் துணையோடு..!! என் காத்திருப்புக்களின் சுகத்தினை உணர வைத்தவள் நீ தான்..!! யாதார்த்தங்கள் எதுவென அறிந்தும் யாசிக்கிறேன் உன்னை..!! -ரதன்- திருகோணமலை

தற்போதைய செய்திகள்

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

கண்ணீரில் மூழ்கிய நீர்கொழும்பு! உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...