கவிதைகள்

கவிதைகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கவிதைகள்

காதல் நெருப்பு!

எல்லா அணுக்களிலும் உன்னைக் கண்டதால் என்னில் நுழைந்த காற்றுக்கு வந்தது வியப்பு..!! காலோடு கால் உரச கடல் அலைகளையும் மீறி பற்றும் காதல் நெருப்பைப் போல் என்னை முழுவதுமாக பற்றிக் கொண்டுள்ளது காதல் தீ...! -ப்ரியமானவள்- இந்தியா

ஓரக் கண்ணால்…!!

ஓரமாய் சென்ற என்ன ஓரக் கண்ணால் கொன்றவள் நீ..!! உன்னை நினைத்து எழுதப்பட்ட கவிதைகள் உன் முகவரி தராததால் தேங்கிக் கிடக்கிறது ...!!! பெற்றுக் கொள் கவிதையுடன் காதலையும்....!!! -செந்தாமரை- திருகோணமலை இலங்கை

தென்றலும் வடுவாகியது!

காயத்துக்கு மருந்து தேட மருந்தும் காயமானது காதலால்..!! கைதொட முடியாது கை நழுவிச் சென்ற காதல் கலந்தது காற்றோடு..!! உரசிச் செல்லும் தென்றலும் வடுவாகியது உள்ளத்தில்! -மதுமிதா- இந்தியா

எனக்கானவள்!

ஊடுருவும் உணர்வுகளைப் பார்த்து கண்கள் கேட்கும் கேள்விகளுக்கு என் இதயம் சொல்லும் பதில் இவள் எனக்கானவள் என்று...!! -காயத்திரி- இந்தியா

சாளரத்தின் வழியே..!!

கண்கள் மூடாமல் நானிருக்க நினைவுகளாய் என் சாளரத்தின் வழியே வந்து ஆட்டிப் படைக்கிறாய் நீ..!! அருகில் இருக்கும் போது என்னருமை புரியவில்லை உனக்கு..!! விலகிய பின் உருகுவாய் நீ எனக்காக என்ற நம்பிக்கையில் மீண்டும் திரும்பியது சாளரத்தின் வழியே வந்த நினைவுகள்..!! -யாழ்ரதி- இந்தியா

மீட்கப்படாத இதயம்!

காதில் பாய்ந்தது உன் குரல் உன் வதனம் நான் காணவில்லை... இருந்தும் என் இதயத்தில் இடம்பிடித்தவன் நீ..! உன்னிடம் தொலைந்த என் இதயத்தை மீட்க மனமில்லாமல் விட்டு விட்டேன் அப்படியே..!!

வலியுடன் கருகிய காதல்!!

அவன் அனுமதி இல்லாமல் காதலித்தேன்..!! அதனால் தான் என்னவோ என் அனுமதி இல்லாமல் என்னை நிராகரித்து விட்டான்..!! வலியுடன் வளர்ந்த காதல் வலியுடன் கருகியது..!! - ப்ரியமானவள் - இந்தியா

உயிர் கொடுத்து உறவாடா..!!

என் காதல் நினைவுகளை கல்லறைக்குள் புதைத்து விடாதே..!! விதியின் சதியென கூறி விலகி சென்று வேடிக்கை பார்க்க முடியவில்லை என்னால்..!! ஆகவே வந்துவிடு உயிர் கொடுத்து உறவாடா..!! -தினேஷ்- கிளிநொச்சி

காதல் மழைக்காலம்!

காதல் மழைக்காலத்தில் சாரலில் தெரிகிறது உன் முகம்..! முடிவில்லா பயணம் தொடங்கியது முடிவில் நீ இல்லையென்று தெரிந்தும்..! -செந்தூரன்- அவுஸ்திரேலியா

புண்ணாக்கி விடாதே!

கண்ணோரம் வழியும் நீர்த்துளிகள் கூறும் உன் மீது நான் கொண்ட அன்பினை..! பூப்போன்ற என் நெஞ்சமதை புண்ணாக்கி விடாதே அன்பே..! தொலைந்துவிட்டேன் அன்பே உன்னுள் மீட்டுக் கொடு என்னை இல்லையேல் தொலைந்து விடு.....!!

தற்போதைய செய்திகள்

அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணை!

வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நிதிமோசடி விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார். 257,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதியில் நிதி மோசடி தொடர்பான விசாரணைக்காக வாக்கும்மூலம் வழங்க அமைச்சர் ரிஷாட் சென்றுள்ளார். சதொசவில் கடந்த 2014/15...

திடீரென தீப்பிடித்த கொழும்பு சென்ற பேருந்து! அதிஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

தனியார் பயணிகள் பேருந்து ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமாகியுள்ளது. இந்த நிலையில், பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இரத்தினபுரியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று அவிசாவளை, கிரிவந்தல பகுதியில் வைத்து...

இலங்கை தற்கொலை தாக்குதல்! முக்கிய தகவல்களை அம்பலப்படுத்திய பொறியியலாளர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ஒருவர் பல இரகசியங்களை அம்பலப்படுத்தியுள்ளார். அக்ரம் அஹக்கம் என்ற பெறியியலாளர் தற்போது பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தடுத்து...

இலங்கையில் 8 ஆயிரம் பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த வைத்தியர் சிக்கினார்!

இலங்கை சுமார் எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களுக்கு அறுவை சிகிச்சை (சிசேரியன்) செய்த வைத்தியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த குற்றச்சாட்டில் குருணாகல் வைத்தியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 42 வயதான மருத்துவக்கல்லூரி வைத்தியர்...

அவுஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 41 பேருக்கு ஏற்பட்ட நிலை!

சட்ட விரோதமாக அவுஸ்திரேலியா பயணிக்க முற்பட்ட 41 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். தெற்கு கடற்பரப்பிலிருந்து 715 கடல் மைல் தொலைவில் வைத்து 23 ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்களில்...

அதிகம் பார்க்கப்பட்டவை

25-05-2019 இன்றைய ராசிபலன்கள்

2019 மே 25 திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம் மேஷம்:...