கவிதைகள்

கவிதைகள்

Home — Yaalaruvi : Tamil News Portal | Sri Lanka News | World News | Sports News | கவிதைகள்

சிறு புன்னகை..!!

ஒரு நொடிப் பொழுதில் நிகழ்ந்த நம் சந்திப்பில் இதழ்கள் உதிர்த்த சிறு புன்னகையும் ஆயிரம் கவிதகைளை உதிர்த்ததடி கண்ணே!! -அற்புதன்- பிரித்தானியா

பெண்ணே…!!

உன்னை மறந்து விட்டேன் என்று நீ நினைத்து விடாதே என்னால் முடியாது பெண்ணே அது..!! என் வாழ்வில் சுகம் தந்தது உன் நினைவுகளும் கனவுகளும் தான் -ராஜேஷ்- சுண்ணாகம் இலங்கை

என் காதலே..!

உன் மீதான என் காதல் உனக்குப் புரியவில்லை என்பது உண்மை தான்..! ஆனால் உன் நினைவுகளால் நிரப்பப்பட்ட என் கவிகளுக்கு தெரியும்..! கனவுகளைக் களவாடி சோகம் எனும் தீயை மூட்டியவன் நீ.. -இனியவள்- பிரான்ஸ்

அழுகின்ற நிமிடங்கள்!

காலங்கள் கடந்தும் ஒட்டிக் கொண்டுள்ளது உன் நினைவுகள்..! சிரிக்கின்ற நிமிடங்கள் பொய்யாக இருக்கலாம் உன்னை நினைத்து அழுகின்ற நிமிடங்கள் நிஜமானவை..!!

உள்ளத்துச் சிதறல்கள்..!

உடைந்த என் உள்ளக் கண்ணாடியில் ஒரு கோடி உடைந்த துண்டுகள் குற்றிக் கிளிக்கிறது இதயத்தை..!! பக்கம் பக்கமாக வரையப்படும் கவிகள் கூட உள்ளத்துச் சிதறல்களை உணர்த்தவே இல்லையா உனக்கு? -யாழ்ரதி- இந்தியா

மனக் கண்ணாடி..!

என் மனக் கண்ணாடியில் ஒட்டப்பட்ட உன் உருவம் என்றும் அழியாது!! என்னவன் முகம் கண்டால் யுகங்கள் பல கடந்துவிடுவேன் சுகமாக..!! -கவிதா- தஞ்சாவூர் இந்தியா

உணர்த்தவே இல்லையடி!

உன் பிரிவு தந்த வலி என்னைக் கவிஞனாக மாற்றியதடி கண்ணே..!! ஆனால் என் கவிதை உனக்கு என் அன்பை உணர்த்தவே இல்லையடி கண்ணே...!! -சிந்துஜன்- மட்டக்களப்பு

மந்திரம் செய்ய வேண்டுமா?

சம்மதம் என்ற ஒற்றை வார்த்தை நீ கூற நான் உனக்கு மந்திரம் செய்ய வேண்டுமா பெண்ணே..? உன்னை சுமக்கும் என் இதயம் வேறு ஒருவரை சுமக்கத் தயார் இல்லையடி கண்ணே..!! -ராகவன்- அவுஸ்திரேலியா

சுட்டெரித்தாய் நீ..!!

உனக்கான என் வாழ்வை கானல் நீராக்கியது நீதான்..!! வெந்தணல் என்னுள் பாய்ச்சி சுட்டெரித்தாய் நீ..!! சுட்டெரிகிறேன் நான்..!! -காயத்திரி- லண்டன்

கரிக்கிறது கண்ணீர் துளிகள்..!

கண்களை மூட கனவுகள் வரவில்லை கரிக்கிறது கண்ணீர் துளிகள்..! கண்ணில் விழுந்து இதயத்தில் விழுந்த உன்னை இதயத்தில் இருந்து எடுக்க முடியவில்லை... -விவேகன்- இந்தியா

தற்போதைய செய்திகள்

இலங்கை பயங்கரவாத தாக்குதல்! பொறுப்பேற்றது ஐஎஸ்

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலிற்கு ஐஎஸ் அமைப்பு உரிமை கோரியுள்ளது என இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது ஐஎஸ் அமைப்பின் அமாக் பிரச்சார முகவர் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. இலங்கையில் கிறிஸ்தவர்களை இலக்குவைத்தவர்கள் ஐஎஸ்...

கொழும்பில் வெடிகுண்டுடன் நுழைந்த இரண்டு வாகனங்கள்! பொலிஸார் எச்ச்ரிக்கை

வெடிபொருட்கள் அடங்கியுள்ளதாக சந்தேகிக்கப்படும் லொறியொன்றும் சிறியரக வேனொன்றும் தொடர்பில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, கொழும்பு நகரின் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சட்டவிரோத செயற்பாடுகளுக்கு...

நியூசிலாந்து தாக்குதலுக்கு பதிலடியாகவே இலங்கையில் தாக்குதல்!

நியூஸிலாந்தின் கிரிஸ்ட்சேர்ச் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன இதனை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று விசேட உரை ஆற்றியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...

இலங்கை தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென அறிவிப்பு!

இலங்கையில் பாதுகாப்புக் காரணங்களுக்காக தேவாலயங்களில் வாழிபாடுகளை மேற்கொள்ள வேண்டாமென பேராயர் கர்தினால் மெல்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து பேராயர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பாதுகாப்பு குறித்து உத்தரவாதம் அளிக்க முடியாது. எனவே மீள் அறிவிக்கும் வரை...

கண்ணீரில் மூழ்கிய நீர்கொழும்பு! உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று

நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய பகுதியில் சென் செபஸ்தியன் தேவாலயத்தில் இடம்பெற்ற தற்கொலைக்குண்டு தாக்குதல்களில் உயிரிழந்தவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது கிறிஸ்தவ பாதிரியார்கள், பொதுமக்கள் என அனைவரும் இனம், மதம் என்பவற்றை கடந்து திரளாக ஒன்றிணைந்து...

அதிகம் பார்க்கப்பட்டவை

கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டு! வெற்றிகரமாக செயலிழப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு உள் நுழையும் ஆடி அம்பலம வீதியில் இருந்து பி.வீ.சி. குழாயில் பொருத்தப்பட்டு தயார் செய்யப்பட்ட 6 அடி வரை நீளமான குண்டு மீட்கப்பட்டுள்ளது. அந்த குண்டு விமானப்படையினரால் மீட்கப்பட்டு செயலிழக்கச்...