Facebook மூலம் வருமானம் ஈட்டலாம்! அறிமுகமாகும் புதிய வசதி

Facebook நிறுவனத்தினால் வருமானம் ஈட்ட முடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய செயலி மூலம் பயனாளர்கள் வருமானத்தை ஈட்ட முடியுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி பயனாளர்களின் தரவுகளை பெற்றுக் கொள்வதற்காகவே, Facebook நிறுவனம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

பயனாளர்களின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் அவர்களது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிப் பயன்பாட்டுக் கோலத்தைக் கண்டறிவதற்காகவே Facebook நிறுவனம் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளமை குரிப்பிடத்தக்கது.