iPhone பிரியர்களுக்கு Apple நிறுவனத்தின் மகிழ்ச்சியான தகவல்!

Apple நிறுவனம் சில ரக iPhoneகளின் விலையைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

iPhone கைத்தொலைபேசிகள் அறிமுகம் செய்யப்பட்ட 12 ஆண்டுகளில் இவ்வாறு விலை குறைக்கப்படுவது.

இது இரண்டாம் முறை அமெரிக்காவைத் தவிர்த்த மற்ற நாடுகளில் விலை குறைக்கப்படும் என்று கூறப்பட்டது.

அமெரிக்க டொலரின் மதிப்பு அதிகரித்துவருவதை அதற்குக் காரணமாகச் சுட்டியது நிறுவனம்.

எந்தெந்த நாடுகளுக்கு விலைக்குறைப்பு பொருந்தும் என்று நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை.

சீனா உள்ளிட்ட பல நாடுகளில் iPhone கைத்தொலைபேசிகளின் விற்பனை சரிந்துவருகின்றது.

கடந்த ஓராண்டில், அமெரிக்க டொலரின் மதிப்பு 10 வீதம் அதிகரித்தது. அதில் Apple நிறுவனத்தின் பொருட்கள், மற்ற நிறுவனங்களின் பொருட்களோடு ஒப்பிடுகையில் அதிக விலையுடையதாக இருந்துவருகின்றன.

இதனால் சந்தையில் இருக்கும் இடத்தை நிறுவனம் கணிசமாக இழந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.