Samsung கைபேசிகளின் மடக்கும் திரைகளில் ஏற்பட்ட கோளாறு! அதிர்ச்சியில் பயனாளர்கள்

Samsung நிறுவனத்தின் Galaxy Fold எனும் புதிய மடக்கும் திரை கொண்ட கைபேசிகளில் கோளாறு ஏற்படுவதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

சுமார் 2,000 டொலர் மதிப்புள்ள கைபேசியைப் பயன்படுத்தத் தொடங்கிய சில நாள்களிலேயே அதன் திரை விட்டுவிட்டு மின்னுவதாகவும், சிலருடைய திரைகளில் விரிசல் விழுந்திருப்பதாகவும் Bloomberg, The Verge, CNBC ஊடக விமர்சகர்கள் Twitterஇல் தெரிவித்தனர்.

அமெரிக்காவில் ஏப்ரல் 26ஆம் திகதியிலிருந்து Galaxy Fold கைபேசியின் விற்பனை அதிகாரபூர்வமாகத் தொடங்கும். இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் அவை அறிமுகமாகும்.

Galaxy Fold கைபேசிகளில் கோளாறுகள் குறித்துப் புகார்கள் வந்துள்ளதாக Samsung தெரிவித்துள்ளது.

கைபேசிகளை மேலும் சோதனையிட்டு, அதன் பயன்பாடு குறித்து வாடிக்கையாளர்களுக்கு மேலும் தகவல் வழங்கப்போவதாக நிறுவனம் தெரிவித்தது.