UWW மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்!

UWW கடற்கரை மல்யுத்த உலக சம்பியன்ஷிப் தொடர்’ என பெயரிடப்பட்ட விளையாட்டுப் போட்டி துருக்கியின் சரிஜெர்மில் அமைந்துள்ள கடற்கரையில் நடைபெற்றது.

இந்த தொடரில் ஜோர்ஜிய, பாகிஸ்தான். ரோமேனியா, உள்ளிட்ட 17 நாடுகளை சேர்ந்த 150 இற்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இதில் ஆண்களுக்கு நான்கு, பெண்களுக்கு நான்கு என மொத்தம் எட்டு சம்பியன்ஷிப் பட்டங்களுக்கான போட்டிகள் நடைபெற்றன.

இப்போட்டித் தொடரில், ஆண்களுக்கான 70 கிலோ கிராம் எடை பிரிவில், ஜோர்ஜியாவை சேர்ந்த கோன்ஸ்டன்டின் கபலாஷ்விலி சம்பியன் பட்டம் வென்றார்.

நடப்பு சம்பியனான சீமென் ரதுலவ்வை வீழ்த்தியே கோன்ஸ்டன்டின் கபலாஷ்விலி, சம்பியன் பட்டம் வென்றார்.

80 கிலோ கிராம் எடை பிரிவில் ஜேர்ஜியாவின் ஜெகோப் மகராஷ்விலி சம்பியன் பட்டம் வென்றார்.

90கிலோ கிராம் எடை பிரிவில் பாகிஸ்தானின் மொஹமட் இமான், சம்பியன் பட்டம் வென்றார்.

90கிலோ கிராமிற்கு மேற்பட்ட எடை பிரிவில், துருக்கியின் பாகி சகின் சம்பியன் பட்டம் வென்றார்.

இதேபோல பெண்களுக்கான நான்கு பிரிவிலுமே ஜேர்ஜியாவை சேர்ந்த வீராங்கனைகளே சம்பியன் பட்டம் வென்றனர்.

பெண்களுக்கான 50 கிலோ கிராம் எடை பிரிவில், ஜேர்ஜியாவின் ஸ்டீபானியா க்ளூடியா, உள்ளூர் சம்பியனான செவில் அலியோக்லியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றார்.

பெண்களுக்கான 60 கிலோ கிராம் எடை பிரிவில், உலக சம்பியனான இத்தாலியின் பிரான்செஸ்கா இன்டெலிகாடோவை வீழ்த்தி மற்றொரு ஜேர்ஜிய வீராங்கனையான கிறிஸ்ஸட்டா டன்டே இன்ஸ் சம்பியன் பட்டம் வென்றார்.