Whatsappஇல் அறிமுகமாகும் அற்புதமான வசதி!

Whatsappஇல் பயனாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் புதிய வசதி ஒன்று அறிமுகமாகவுள்ளது.

இனிமேல் Whatsapp பக்கத்தில் இருந்து வெளியே செல்லாமலேயே Facebook, YouTube வீடியோக்களை பார்க்கும் வசதி உள்ளது.

புதிய அப்டேட்டில் இந்த வசதி விரைவில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறுஞ்செய்தி, போட்டோ மற்றும் தகவல்களை பறிமாறிக் கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த Whatsapp தற்போது பல்வேறு வசதிகளுடன் புதுப்புது அப்டேட்களை வ‌ழங்கி அசத்தி வருகிறது.

பயனர்களிடம் வரவேற்பை பெற்ற Whatsapp, தற்போது புதிய அப்டேட்டை வழங்கியுள்ளது.

அதற்கமைய Whatsappஇல் பகிரப்படும் YouTube, Facebook, Instagram ஆகியவற்றின் வீடியோ லிங்குகளை வாட்ஸ்அப் பக்கத்தில் இருந்து வெளியே செல்லாமல் அங்கேயே பார்க்கக்கூடிய‌ வசதியை அறிமு‌கப்படுத்தவுள்ளது.

ஐபோன்களில் மட்டுமே செயற்பட்டுவந்த பிக்சர் இன் பிக்சர் என்ற வசதி இனி ஆண்ட்ராய்டு மொபைல்களிலும் செயல்படவுள்ளது.

இதன் மூலம் YouTube, Facebook, Instagram வீடியோக்களை Whatsappஇல் பார்க்கலாம்.

பிக்சர் இன் பிக்சர் வசதியின் மூலம் Whatsappஇற்கு வரும் லிங்கை கிளிக் செய்தவுடன் லிங்குக்கு மேற்பகுதியிலே அந்த வீடியோக்கள் இயங்கும்.

வீடியோக்களை பார்த்துக்கொண்டே நம்மால் chat செய்யவும் முடியும் என Whatsapp நிறுவனம் தெரிவித்துள்ளது.